12 வயது சிறுவன் நீரில் மூழ்கிப் பலி.

நீரில் மூழ்கி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏரியில் நீராடிக்கொண்டிருந்த சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

பிரதேசவாசிகள் இணைந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்த பின் சிறுவன் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் புத்தளம் – கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் ஆவார்.

சிறுவன் தனது அத்தையுடன் நேற்று ஏரியில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.