கிராம உத்தியோகத்தர் கோர விபத்தில் மரணம்.

வாகன விபத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை காலை மாத்தளை, கைக்காவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை – ரத்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கிராம உத்தியோகத்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.