நாளைய ஹர்த்தால் மிகவும் அவசியம்! – வேழமாலிகிதன் தெரிவிப்பு.
வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னத்தை எதிர்த்தும், இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர் தாயகத்தில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டம் மிகவும் அவசியம் என்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தால் போராட்டம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும்போதே வேழமாலிகிதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“வடக்கு, கிழக்கில் தேவையற்ற பகுதிகளில் இராணுவத்தின் பிரசன்னங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. அரச காணிகள் மற்றும் தனியார் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதன் காரணமாகப் பல்வேறு வகைகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.” – என்றார்.
