யானை தாக்கி தாயும் மகளும் பரிதாப மரணம்.

குருநாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யானை தாக்கியதில் தாயும் மகளும் அம்பன்பொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மகள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காகக் குருநாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

அம்பன்பொல பிரதேச செயலகத்தின் மேலாண்மை சேவைகள் அதிகாரியாக இனோகா குமாரி செயற்பட்டுள்ளார்.

காட்டு யானைகள் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றனர் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள் வழக்கம் போல் வந்திருக்கலாம் எனவும் அந்தப் பகுதி மக்கள் கூறியுள்ளார்.

நேற்றுக் காலை 9 மணியளவில், வயலில் தாயையும் மகளையும் காட்டு யானை தாக்கியது.

தாக்குதலுக்குள்ளான மகளையும் தாயையும் மருத்துவமனையில் சேர்க்கக் குடியிருப்பாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். எனினும், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.