தேசபந்து கைது!

2022 ஆம் ஆண்டு கொழும்பு, காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், அப்போது பொலிஸ்மா அதிபராக இருந்த தேசபந்து தென்னக்கோன் தனது கடமைகளைச் செய்யத் தவறியமையால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவைக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது.

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சட்டதரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று காலை கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர பரிசீலித்தார்.

அதன்படி, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கோரிய முன் பிணை மனுவை நீதிவான் நிராகரித்தார்.

இந்நிலையிலேயே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.