ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்……

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவர் சிறைச்சாலை பேருந்தில் கைவிலங்குடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(22.08.2025) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நீண்ட விசாரணைகளின் பின்னர், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரணில் ஆதரவாளர்களால் குழப்பம்
இதனால், நீதிமன்றத்திற்கு முன்பாக திரண்டுள்ள அதிகளவான ரணில் ஆதரவாளர்கள் கடும் கூச்சலிட்டு வருவதால் அங்கு குழப்ப நிலை நீடிக்கிறது.

இவ்வாறிருக்க ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் கைவிலங்குடன் அழைத்து செல்லப்படும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.