ரணிலின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸார் ஒருவர் காயம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றப் பகுதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரணிலின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மூக்கில் காயமடைந்தார்.
அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர், இரத்தம் சொட்டச் சொட்ட அங்கிருந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
