ரணில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சையில்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன இந்தத் தகவலை இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதும், தொடர்ந்து சிகிச்சை பெறுவதும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் முடிவைப் பொறுத்தே உள்ளது.

எவ்வாறிருப்பினும், ரணில் விக்கிரமசிங்கவை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றுவது குறித்து வைத்தியர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.