நீதிமன்றத்தில் ஆஜரான ராஜித விளக்கமறியலில்
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தன்னைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவைத் தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று காலை ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
…………………..
