வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் – விரைந்து செயற்பட்டுத் தீயைக் கட்டுப்படுத்திய மாநகர சபை.
வவுனியா, முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள கடைத் தொகுதி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் இந்தத் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் விரைந்து செயற்பட்ட வவுனியா மாநகர சபை தீயணைப்புப் படை, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

வவுனியா, முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விவசாய உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையின் மேல் மாடியில் இருந்த அதன் களஞ்சியசாலையில் திடீரென தீப்பற்ற ஆரம்பித்தது.
இதனையடுத்து, கடை உரிமையாளரால் வவுனியா பொலிஸ் மற்றும் வவுனியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு என்பவற்றுக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த தீயணைப்புப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்து பல மணி நேரப் போராட்டத்தின் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இருப்பினும் ஒரு தொகுதி விவசாய உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
