என் கொழுந்தியாளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்! – டவரில் ஏறி வினோத போராட்டம் நடத்திய இளைஞர்!

இளைஞர் ஒருவர் நடத்திய விநோத போராட்டம் கவனம் பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசம், கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் சக்சேனா. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த 2021ல் திருமணம் நடைபெற்றுள்ளது.

அந்த பெண் உடல்நலக்குறைவு காரணமாக அடுத்த ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து மனைவியின் சகோதரியை ராஜ் சக்சேனா திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து 2 ஆண்டுகள் வாழ்ந்து வரும் நிலையில், மனைவியின் மற்றொரு தங்கை மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அதனை தனது மனைவியிடமும் கூறியுள்ளார். இதனால் மனைவி திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ராஜ் மின்சார கோபுரத்தின் மீது ஏறி, ‘எனது கொழுந்தியாளை காதலிக்கிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கத்தி கூச்சலிட்டு போராட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,

ராஜ் சக்சேனாவை சமாதானம் செய்ய முயன்றனர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக சமாதான பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியாக அவரது மனைவியின் தங்கையை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளிக்கப்பட்ட பின் இறங்கி வந்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘எனது கொழுந்தியாளும் என்னை காதலிக்கிறார். நானும் அவரை விரும்புகிறேன். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது இதனால் அவரது குடும்பம் தவித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.