இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை!

இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை காலி, எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கனேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரைக் கைது செய்வது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
…………….

Leave A Reply

Your email address will not be published.