நிமலராஜன் படுகொலை வழக்கின் விசாரணை அறிக்கை வவுனியாவில் ஊடகவியலாளர்களால் இன்று விநியோகம்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் விசாரணை அறிக்கை வவுனியா ஊடகவியலாளர்களால் இன்று விநியோகிக்கப்பட்டது.

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் வைத்து பொதுமக்கள், வர்த்தகர்கள், சாரதிகள் ஆகியோருக்கு இந்த அறிக்கை விநியோகிக்கப்பட்டது.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் விசாரணை மற்றும் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான தகவல்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.