லொறி மீது மோதிய மோ. சைக்கிள்! ஆண் ஒருவர் பரிதாப உயிரிழப்பு!!

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் 48ஆவது கிலோமீற்றர் மைல்கல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கண்டியில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துநர் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
…………………

Leave A Reply

Your email address will not be published.