தீவகத்தில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் வேலணை – வங்காளவடிச் சந்தியில் உள்ள பொது நினைவுத் தூபியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது மாவீரர் ஒருவரின் தாயார் மற்றும் சகோதரரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரரின் பெற்றோரும் மூத்த போராளியுமான பசீர் காக்காவினால் மலர் மாலை சூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்கள், வேலணை பிரதேச செயலக உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.



