கொழும்பை மீண்டும் ஆக்கிரமிப்பாரா மஹிந்த? – மொட்டுக் கட்சி பதில்.

“தங்காலை, கால்டன் இல்லத்தில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் மீண்டும் குடியேறுவதற்கு இதுவரையில் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“சந்திப்புகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காகக் கொழும்பு வர நேரிட்டால் மஹிந்த ராஜபக்ஷ வருவார். பிறகு அவர் ஊருக்குத் திரும்புவார்.” – என்றும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.