ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.
வவுனியா வடக்கு, கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக பல தடவைகள் வலயக் கல்விப் பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர் பற்றாக்குறையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிவர்த்தி செய்து தர வேண்டும்.” – என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, விரைவில் இந்தப் பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.



