(update ) நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து தனது கட்சியை இன்று பதிவு செய்திருக்கிறார்.

 

கட்சித் தலைவராக பத்மநாதனும் , பொதுச் செயலாளராக எஸ். ஏ. சந்திரசேகரும் , பொருளாளராக சோபாவும் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

update

ActorVijay, PoliticalParty, MakkalIyyakkam, விஜய், மக்கள் இயக்கம், அரசியல் கட்சி, பதிவு

நடிகர் விஜய் தரப்பில் அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர். நற்பணி மன்றங்களாக இருந்த விஜய் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகத்தை நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கவனித்து வந்தார்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம், தேர்தல் ஆணையத்தில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாய் ஷோபனா பெயர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Leave A Reply

Your email address will not be published.