ஜனாதிபதி நாளை அமெரிக்கா பயணம்! – புதனன்று ஐ.நா. பொதுச் சபையில் உரை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை திங்கட்கிழமை இரவு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்துகொள்வார்.

Leave A Reply

Your email address will not be published.