யாழ்ப்பாணத்தில் விசேட தொழிற்சந்தை – பெருமளவு இளைஞர், யுவதிகள் பங்கேற்பு.

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களமும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் இணைந்து நடத்தும் விசேட தொழிற்சந்தை இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தொழிற்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.கிரியெல்ல மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொழிற்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவினால் விசேட தொழிற்துறை கண்காட்சியும் மாவட்ட செயலக வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பெருமளவு இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு பயணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.