ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி இன்று உரை.

அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் அவர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இணைந்து கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.