தென்னாபிரிக்க ஜனாதிபதியை நியூயோர்க் நகரில் சந்தித்த அநுர.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவைச் சந்தித்துப் பேசினார்.

நியூயோர்க் நகரில் அமெரிக்க நேரப்படி நேற்றுப் பிற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
தென்னாபிரிக்கா, இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
