எஸ்.ரி.எவ். துரத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து மரணம்.

கிளிநொச்சியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட நபர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுகின்றது எனப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நேற்று கைது செய்யச் சென்றபோது, அவர் தப்பிச் செல்ல முற்பட்டு கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரே (வயது 24) இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.