மோ. சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு!
வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலவிய பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பாதசாரி இருவரும் பலத்த படுகாயமடைந்தனர்.
பாதசாரி கற்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் பாலவிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
