தங்காலை சென்று மஹிந்தவைச் சந்தித்த இந்தியத் தூதுவர் – இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பில் பேச்சு.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு அம்பாந்தோட்டை, தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

இதன்போது இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கை அரசியலின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டன என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – விஜேராமவில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வருகின்றார்.

மஹிந்த கொழும்பில் இருந்து வெளியேற முன்னர் அவரைச் சீனத் தூதுவர் சந்தித்திருந்தார். இந்நிலையில், இந்தியத் தூதுவர் தங்காலைக்குச் சென்று மஹிந்தவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.