அம்பாந்தோட்டையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம – சந்துங்கம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 58 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கியால் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.