மகேந்திரனுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் அரசுக்குப் பத்து பில்லியன் ரூபாவுக்கு மேல் இழப்பு ஏற்பட்டது எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ்.போதரகம நேரு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபரை முந்தைய விசாரணை திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது என்று நீதிவான் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான ஆதாரங்களை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

முறைப்பாடு தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடர முடியும் என்று சுட்டிக்காட்டி, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர்.

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தின் மூலம் அரசுக்குப் பத்து பில்லியன் ரூபாவுக்கு மேல் இழப்பு ஏற்பட்டது என்று இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டைப் பரிசீலித்த பின்னர் நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அர்ஜுன மகேந்திரன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார் என்று இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2015 பெப்ரவரி 27 அன்று நடைபெற்ற பிணைமுறி ஏலத்தில் அரசுக்கு 688 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியது உட்பட 23 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.