பெண்ணொருவர் கொடூரக் கொலை.
பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொடை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அங்கொடை , அக்கொன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணுக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பெண் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எதிர் வீட்டில் வசிக்கும் நபரும், கொலை செய்யப்பட்ட பெண்ணும் ஒரே நிறுவனத்தில் பணியாளர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து எதிர் வீட்டில் வசிக்கும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
