நெடுந்தீவுக் கடற்பரப்பில் இன்று இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின், பாண்டிச்சேரியைச் சேர்ந்த 12 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் ஒரு படகில் மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேற்படி 12 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.