கேகாலையில் ரயில் மோதி 14 வயது சிறுவன் மரணம்!
ரயில் மோதி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை மாவட்டம், ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மெதகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் திஸ்மல்பொல ரயில் நிலையத்துக்கு நண்பர்களுடன் இந்தச் சிறுவன் சென்றுள்ளார்.
இதன்போது, ரயில் கடவையில் இறங்கி அடுத்து ரயில் மேடைக்கு இந்தச் சிறுவன் செல்லும் போது பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கிச் சென்ற ரயில் இவர் மீது மோதியுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
