யானை தாக்கி குடும்பஸ்தர் பரிதாபப் பலி!

காட்டு யானை தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் புத்தளம், ஆனமடு, சியம்பலாகஸ்வெவ பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஆனமடு, சியம்பலாகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இவர் இன்று காலை 6.30 மணியளவில் தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.