வெள்ளவத்தையில் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஆண் ஒருவர் மரணம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஹுது மாவத்தையிலுள்ள இராமகிருஷ்ணா மிஷனுக்கு அருகில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில், பிலியந்தலையைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

Leave A Reply

Your email address will not be published.