பெண் கடற்படைச் சிப்பாய் மீது பாலியல் கொடுமை: ஆண் கடற்படைச் சிப்பாய் 14 நாள்கள் விளக்கமறியலில்…

யாழ். புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் பெண் கடற்படைச் சிப்பாய்க்கு பாலியல் கொடுமை புரிந்த ஆண் கடற்படைச் சிப்பாயை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புங்குடுதீவு கடற்படை முகாமில் கடந்த 28 ஆம் திகதி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆண் கடற்படைச் சிப்பாயும், பாதிக்கப்பட்ட பெண் கடற்படைச் சிப்பாயும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு விசாரணையின் பின்பு காங்கேசன்துறை பொலிஸாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

காங்கேன்துறைப் பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண் கடற்படைச் சிப்பாயை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி ஊர்காவற்றுறைப் பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்த வேளை, ஆண் கடற்படைச் சிப்பாயை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.