வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு! – அச்சுவேலியில் வன்முறைக் கும்பல் வெறியாட்டம்.

யாழ்ப்பாணம், அச்சுவேலிப் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டதுடன் பெற்றோல் குண்டுகளையும் வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

பத்தைமேனி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற வன்முறைக் கும்பல் ஒன்று வீட்டின் கதவுகளை உடைத்து திறக்க முயற்சித்துள்ளது.

வீட்டில் இருந்தோர் உட்பக்கமாகக் கதவுகளை மூடி விட்டு கூக்குரல் எழுப்ப தாக்குதலாளிகள் வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.