மலையக மக்களுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும்! – மனோ அணியிடம் தூதுவர் உறுதி.
இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்திய வீட்டுத் திட்டம், மலையக மக்களுக்குரிய உரிமைகள் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மலையகச் சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என இதன்போது இந்தியத் தூதுவர் உறுதியளித்தார்.
