சர்வதேச நீதி கோரி செம்மணியில் அமைக்கப்பட்ட ‘அணையா விளக்கு’ நினைவுத் தூபி அடித்து உடைப்பு – விஷமிகள் வெறியாட்டம்.
யாழ்ப்பாணம், செம்மணி வளைவுப் பகுதியில் அமைக்கப்பட்ட ‘அணையா விளக்கு’ நினைவுத் தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணம் வரவேற்கின்றது” என்ற வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி ‘அணையா விளக்கு’ போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் போது ‘அணையா விளக்கு’ ஏற்றப்பட்டு இருந்தது. போராட்டத்தின் முடிவில் அந்தப் பகுதியில் அணையா விளக்கு நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.
அந்த நினைவுத் தூபியே தற்போது விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
