தொடரும் சீரற்ற காலநிலை! 9 ஆயிரத்து 542 பேர் பாதிப்பு!! – நால்வர் பரிதாப மரணம்.
நுவரெலியா, கண்டி, பதுளை, குருநாகல், காலி உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால 2 ஆயிரத்து 395 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று புதன்கிழமை மதியம் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 422 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
