மாகாண சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி வெல்லும்! – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நம்பிக்கை.
வரும் மாகாண சபைத் தேர்தலில் 9 மாகாண சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிநடை போடும் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்றத்தில் சலுகைகள் கிடைக்காததால் எதிரணி எம்.பிக்கள் சிலர், பதவி துறந்துவிட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முற்படுகின்றனர். இது அவர்களுக்குள்ள உரிமை. அதனை நாம் சவாலுக்குட்படுத்தவில்லை.
எதிரணிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட்டால் கூட எமக்குச் சவால் இல்லை. 9 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும்.” – என்றார்.
