யாழ். இந்துக் கல்லூரியில் இன்று போதைக்கு எதிரான விழிப்புணர்வு.

விஷப் போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ். இந்துக் கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளின் தாக்கம் எவ்வாறு சமூக மத்தியில் ஏற்படுத்தப்பட்டுகின்றது என்பது தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் மாணவர்கள் மத்தியில் பாடசாலை அதிபர், பொலிஸ் உயர் அதிகாரிகள் கருத்துரைகளை வழங்கினார்கள்.

அத்துடன், விழிப்புணர்வு தெரு நாடக ஆற்றுகையும் நடைபெற்றது

Leave A Reply

Your email address will not be published.