யாழில் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் நால்வர் சிக்கினர்!
யாழ்ப்பாண நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை 4 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 7 போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
