2029 இல் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமலே களமிறங்குவார்! – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறுகின்றார்.
“வரும் 2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ஷவே வேட்பாளராக களமிறங்குவார். தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சியில் அவரே சிறந்த வேட்பாளராக உள்ளார்.”
இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. சவாலை ஏற்கக்கூடிய தலைவருக்கே நாட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள். கட்சிகளும் இத்தகைய நபரையே ஆதரிக்கும்.
கடந்த முறை நெருக்கடியான சூழ்நிலையிலும் நாமல் ராஜபக்ஷ போட்டியிட்டார். எமது கட்சியில் தற்போதுள்ள சிறந்த வேட்பாளர்தான் நாமல் ராஜபக்ஷ. அவர்தான் ஜனாதிபதி வேட்பாளர். தன்னை அவர் பலப்படுத்திக் கொண்டு வருகின்றார்.” – என்றார்.
