ரயிலுடன் மோதிய ஓட்டோ! சாரதி பரிதாப உயிரிழப்பு!!

ரயில் மோதி ஓட்டோ சாரதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்திலேயே ஓட்டோ சாரதி உயிரிழந்துள்ளார்.

கவனக்குறைவாகச் செலுத்தப்பட்ட ஓட்டோ ஒன்று பெலியத்தையில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஓட்டோ சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இறைச்சிகளை ஏற்றிச் சென்ற ஓட்டோவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.