கார் மோதி பாதசாரி பரிதாப உயிரிழப்பு!
வீதி விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று இரவு அனுராதபுரம் – குருநாகல் வீதியில் அலுத்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
காரின் சாரதி காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
