தெல்லிப்பழையில் கோர விபத்து! இளம் குடும்பஸ்தர் பரிதாபப் பலி!!

யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் தனது மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து கீரிமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை கனரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மயிலிட்டியைச் சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், கனரக வாகனத்தை முந்தியச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி கீழே வீழ்ந்துள்ளார். இதன்போது கனரக வாகனம் அவர் மீது மோதியுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.