மோ. சைக்கிளும் பஸ்ஸும் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!
மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை மித்தெனிய – வலஸ்முல்ல வீதியில் கரமெட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துநர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய இளைஞரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.
