இறம்பொடையில் இன்று குளவி கொட்டி 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்…
நுவரெலியா, இறம்பொடை, வெதமுல்லை தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் எழுவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆண் தொழிலாளர்கள் ஐவரும், பெண் தொழிலாளர்கள் இருவருமே குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
