சட்டவிரோதமாகத் தமிழகம் சென்ற வல்வெட்டித்துறை இளைஞர் கைது!
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாகப் படகில் பயணித்த ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மகாலிங்கம் கண்ணன் என்னும் 33 வயது இளைஞரே தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞர் தமிழகம் – நாகபட்டினத்தில் இறங்கி அங்கிருந்து இராமநாதபுரம் பயணித்துள்ளார்.
அவர் இராமநாதபுரத்தில் மண்டபம் அகதி முகாமில் தங்கியுள்ள தனது உறவினர்களைச் சந்திக்க முற்பட்ட சமயமே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
