கொட்டாஞ்சேனை சூடு: மேலும் ஐவர் சிக்கினர்! – இருவர் பெண்கள் எனத் தெரிவிப்பு.

கொழும்பு – கொட்டாஞ்சேனை, 16ஆம் ஒழுங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்கள் கொழும்பு மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 முதல் 33 வயதுக்குட்பட்ட கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய மற்றும் கொழும்பு 13 பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.