யாழ். வந்தார் தொல்.திருமாவளவன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்த தொல். திருமாவளவனைத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வரவேற்றார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன் தொடக்க விழாவில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்வதற்காகத் தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தொல். திருமாவளவன் இன்று முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.