சட்டவிரோதமான முறையில் படகு மூலம் தமிழகம் சென்ற மன்னார் வாசி கைது!
சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி – அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடி – அரிச்சல்முனை கடற்கரைப் பகுதியில் இன்று காலை மரைன் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கடற்கரையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையில் இருந்து தப்பி தனுஷ்கோடி வந்து இறங்கியமை தெரியவந்ததையடுத்து அவரைக் கைது செய்த மரைன் பொலிஸார், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை, மன்னார் – வங்காலைப் பகுதியைச் சேர்ந்த சூசை தாசன் (வயது 56) என்பவர் என்று தெரியவந்தது.
இதையடுத்துச் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகத் தமிழகத்துக்குள் சென்றதன் காரணம் குறித்து மேற்படி நபரை மரைன் பொலிஸார், மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
